search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிலெய்டு டெஸ்ட்"

    அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார். #AUSvIND #AdelaideTest #RishabhPant
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங்கைவிட, பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டது.

    இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். இதேபோல் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தின் பங்களிப்பும் அணியின் வெற்றிக்கு மிகுந்த உதவியாக இருந்தது. நெருக்கடியான தருணங்களில் அவர் முன்னணி பேட்ஸ்மேன்களை கேட் பிடித்து அவுட் ஆக்கினார்.

    இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 6 கேட்ச், இரண்டாம் இன்னிங்சில் 5 கேட்ச் என 11 கேட்ச் பிடித்து சாதனை படைத்துள்ளார் ரிஷப் பந்த். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார்.



    1995ம் ஆண்டு இங்கிலாந்தின் ஜேக் ரஸல் மற்றும் 2013ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் 11 கேட்ச்கள் பிடித்து உலக சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர். தற்போது அவர்களுடன் ரிஷப் பந்தும் இணைந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து பாப் டெய்லர் (இங்கிலாந்து), கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா), விர்திமான் சகா (இந்தியா)  ஆகியோர் 10 கேட்ச்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். #AUSvIND #AdelaideTest #RishabhPant
    அலெய்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான இன்று 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது. #INDvAUS #AdelaideTest
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள்  விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிதானமாக ஆடிய ஷேன் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி கவனமாக விளையாடிய நிலையில், 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும், ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.  தொடர்ந்து ஆடிய ஷேன் மார்ஷ் அரை சதம் கடந்தார். ஆனால் அவர் 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக ஹெட் 14  ரன்களிலும் அவுட் ஆனார். விக்கெட்டை காப்பாற்ற கடுமையாக போராடிய டிம் பெயின் 41 ரன்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். 187 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. தோல்வியைத் தவிர்க்க போராடி வருகின்றனர்.  #INDvAUS #AdelaideTest
    ×